முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு – மல்லாவி பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மல்லாவி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அனிச்சாமிகுளம் பிரதேசத்தில் மல்லாவி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்டவர் 32 வயதுடையவர் எனவும் மல்லாவி பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

Related Posts