கலாசார சீரழிவில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவர்: யாழில் சுவரொட்டி

notes_21012013யாழ். மாவட்டத்தில் தமிழர்களின் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் ஆடை அணிபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று “நாளைய தீர்ப்பு” என்று உரிமை கோரப்பட்டுள்ளவர்களினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ். நகரத்தின் மையப்பகுதிகளில் அவ்வாறான சுவரொட்டிகள் ‘மீண்டும் உரக்க கட்டளை’ என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ளன.

இதில் பலராலும் கலாசார நகரம் என்று வர்ணிக்கப்படும் யாழ். மண்ணில் அது அழிந்துபோகும் அபாயம் காணப்படுகின்றது என்றும், இது தொடர்பில் முதலில் அறியத்தந்தபோதும் இதனை வேடிக்கையாக பலரும் உற்றுநோக்குவதுபோல தெரிகின்றது. இவ்வாறான கலாசார சீரழிவுகளில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவார்கள் என்று அந்த சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts