காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். நாவலர் வீதியில் உள்ள (UNHCR) அலுவலகம் முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்து.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களோடு யாழ். பல்கலைகழக மாணவ பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

இதேவேளை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்றில் கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றுடன் 2018 நாட்களைத் தாண்டி போராட்டத்தை முன்னேடுத்திருந்தனர்.

அத்துடன் ஆகஸ்ட் 30 ஆம் திகதி ஐ.நா.வினால் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினமாக பிரகடனப் படுத்தியதையடுத்து ஆண்டு தோறும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னேடுக்கின்றமை குறிப்பிடதக்கது.

Related Posts