வாழ்வின் எழுச்சி திட்டம் தொடர்பில் ஒரு நாள் செயலமர்வு

thevinegumaவாழ்வின் எழுச்சித்திட்டம் தொடர்பில் பிரதேச மட்டத்தில் அலுவலர்களையும் கிராம மக்களையும் அறிவுறுத்தும் ஒரு நாள் செயலமர்வில் இன்று புதன்கிழமை நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நல்லூர் பிரதேச செயலாளர் செந்தில்நந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

வாழ்வெழுச்சித்திட்டத்தின் பயன்பாடு, அதனால் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் தொடர்பில் இந்த செயலமர்வில் திணைக்களத் தலைவர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, மற்றும் திணைக்களத்தலைவர்கள், மாநகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts