இரு நாட்டு மீனவர் பிரச்சனைகளும் விரைவில் தீர்க்கப்படவேண்டும் என்பதே எமது விருப்பம். இதற்காக இருநாட்டு மீனவர்களும் கூடி கதைத்து ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும்’ என்று யாழ் இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மீனவர் பிரச்சனை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
இந்திய மீனவர்களை இங்கு வந்து மீன் பிடியுங்கள் எல்லை தாண்டிவாருங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. அவர்கள் வந்து தொழில் செய்கின்றனர்.
இந்தப்பிரச்சனை விரைவில் தீர்கப்படவேண்டிய பிரச்சனை. தத்தமது மீனவர் சங்கங்கத்துடன் தொடர்பு கொண்டு ஒன்றாக கூடி இருதரப்பினரும் முடிவுகள் எடுக்கவேண்டும்.
இதற்கான உதவிகளை வழங்க அரசாங்கம் தயாரக இருக்கின்றது. இதற்கொரு முடிவு காணப்படவேண்டும் என்பதில் நாங்கள் விருப்பத்தோடு இருக்கின்றோம்’ என்றார்.