யாழ். மாவட்டத்தில் இதுவரையில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 376 மிதிவெடிகள், 534 தாங்கி எதிர்ப்பு வெடிகள் மீட்பு

Minesயாழ். மாவட்டத்தில் இதுவரையில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 376 தனிநபர் மிதிவெடிகளும், 534 தாங்கி எதிர்ப்பு மிதிவெடிகளும் மீட்கப்பட்டதாக வடபிராந்திய மிதிவெடி செயற்பாட்டு அலுவலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தரவுகள் யாவும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியை உள்ளடக்கியவை.

மொத்தமாக 565 வேலைப் பகுதிகளில் 4 கோடியே 38 லட்சத்து 78 ஆயிரத்து 186 சதுர மீற்றர் பகுதியில் வேலை செய்யப்பட்டுள்ளது. இதில் 529 வேலைப் பகுதியில் 3 கோடியே 97 லட்சத்து 28 ஆயிரத்து 446 சதுர மீற்றர் பகுதியானது முழுமையாக கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளது.

இதில் 36 வேலைப் பகுதியில் 41 லட்சத்து 49 ஆயிரத்து 740 சதுர மீற்றரில் அதிக ஆபத்தான மிதிவெடிகள் காணப்பட்டுள்ளன. தற்போது 28 வேலைப் பகுதிகளில் 12 லட்சத்து ஆயிரத்து 468 சதுரமீற்றரில் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இன்னமும் 8 வேலைப் பகுதியில் 29 லட்சத்து 48 ஆயிரத்து 272 சதுரமீற்றரில் மிதிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளது. இதுதவிர ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 376 தனிநபர் மிதிவெடிகளும், 534 தாங்கி எதிர்ப்பு மிதிவெடிகளும் மீட்கப்பட்டுள்ளன.

ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 161 வெடிக்காத வெடி பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 90.54 சதவீதம் தெரிந்த இடங்களில் கண்ணி வெடியகற்றப்பட்டுள்ளதாக அந்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts