கொரோனா வைரஸின் பதிய திரிபு பரவும் அபாயம் – 4 தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்து

கொரோனா வைரஸின் பதிய திரிபு மீண்டும் பரவும் அபாயம் உள்ளதால், 4 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசியை சகல அரச வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள் மற்றும் பெயரிடப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொரோனாவுக்கு எதிரான 4 தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்வதன் ஊடாக வைரஸ் தொற்றின் பாதிப்பினை குறைத்துக்கொள்ள முடியும் என்பதுடன், மரணம் ஏற்படும் அபாயத்திலிருந்து விடுபட முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts