எதிர்வரும் வாரங்களில் அரசாங்கத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகவும், புதிய அரசாங்கத்தை அமைக்கும் வகையில் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் உயர்மட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்றும், அதனூடாகவே சர்வதேசம் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற முடியும் என்றும் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை விடுத்து வரும் நிலையில் அது தொடர்பில் ஜனாதிபதி ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை உத்தியோகபூர்வமாக அரசாங்கத்தினால் நாடு முடக்கப்படாவிட்டாலும், நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமையால் இந்த வாரம் முதல் நாடு முற்றாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.