கைதடி அரச முதியோர் இல்லத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தற்காலிக ஊழியர்களாகக் கடமை புரிந்து வருவோர் இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் இருப்பதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி அரச முதியோர் இல்லத்தில் தற்காலிக ஊழியர்களாகக் கடமை புரியும் இவர்கள் நிரந்தர நியமனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து சேவையாற்றி வருகின்றனர்.
இவர்களில் சிலர் அரச நியமனம் கிடைக்க வேண்டிய வயதையும் தாண்டிய நிலையில் உள்ளனர்.
இதே வேளை ஆளணிப் பற்றாக்குறை இருந்த காலங்களில் முதியோர்களைப் பராமரிக்கும் விடயத்தில் இவர்கள் முழுமன தோடு செயற்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் உடனடிக் கவனமெடுத்து இந்த ஊழி யர்களுக்கு ஏற்கனவே வந்த சுற்றறிக்கையின் பிரகாரம் நிரந்தர நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.