இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 700 மில்லியன் கடன் வசதியின் கீழ் கிடைக்கும் எரிவாயுவை ஏற்றிய இறுதி கப்பல் இன்று (வியாழக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது.
குறித்த கப்பலில் இருந்து 40,000 மெட்ரிக் தொன் டீசல் நாட்டிற்கு கிடைக்கவுள்ளது.
எவ்வாறிருப்பினும் இன்று நாட்டை வந்தடையவுள்ள கப்பலிலுள்ள டீசலை விநியோகம் செய்வதற்கு இன்னும் 03 நாட்கள் செல்லும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இல்லை என தெரிவித்து சில எரிவாயு நிலையங்கள் மூடப்பட்டுள்ள போதிலும் நாட்டின் பல இடங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
அத்தோடு, எரிபொருள் வழங்குமாறு கோரி பல இடங்களிலும் போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.