எரிவாயு தட்டுப்பாட்டினால் 80 வீத சிற்றூண்டிச்சாலைகளுக்கு பூட்டு!

நாட்டில் நிலவிவரும் எரிவாயு தட்டுப்பாடுக் காரணமாக புறக்கோட்டை உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள 80 வீதமான சிற்றூண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய சுயத்தொழில் வர்த்தக சங்கம், சிறிய மற்றும் நடுத்தர சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது எரிவாயு கிடைக்காத காரணத்தினால் பலர் தங்களின் தொழிலை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவர்களது குடும்பத்தினர் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts