அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இன்று விடுமுறை!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான சுற்றுநிரூபம் பொது நிர்வாக அமைச்சினால் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

எனினும் அத்தியாவசிய அரச சேவைகளில் ஈடுபடுவோருக்கு இந்த விடுமுறை பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சிரமங்களையும் மின்சாரம் இல்லாத சந்தர்ப்பங்களில் அலுவலகங்களை நடத்துவதில் ஏற்படக்கூடிய சிரமங்களையும் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அரச அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேநேரம், வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தமது சேவைகளை இன்று வழங்கவுள்ளது.

வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts