நாட்டில் அடுத்த மூன்று வாரங்கள் எரிபொருளுக்கு கடினமான காலமாக இருக்கும். எரிபொருள் மற்றும் எரிவாயுவை முடிந்தவரை கவனமாக உபயோகப்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பயணங்களை முடிந்தவரை மட்டுப்படுத்தப்பட வேண்டும். எரிபொருள் மற்றும் எரிவாயுவை பதுக்குவதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.