பட்டாசு வெடித்தில் சிதறியதில் சிறுவன் ஒருவன் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உரும்பிராய் தெற்கு பகுதியிலேயே இந்த சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ச. லக்சாந்தன் (வயது 16 ) என்ற சிறுவனே பட்டாசு வெடிவிபத்தில் கண்ணில் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.