இன்று முதல் மீண்டும் இரவு நேரங்களில் மின்வெட்டு அமுல்!

நாடளாவிய ரீதியில் இன்று (வியாழக்கிழமை) முதல் மீண்டும் இரவு நேரங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை காரணமாக மே 23ஆம் திகதி முதல் இரவு வேளைகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை.

எவ்வாறாயினும், இன்று முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை இரவு வேளையில் ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றும் நாளையும் (03) பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜூன் மாதம் 4ஆம் திகதி இரவு வேளையில் மாத்திரம் ஒரு மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜூன் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்படாதெனவும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related Posts