அதிக போதைப் பொருள் பாவனை இரு இளைஞர்கள் பலி!!

அளவுக்கு அதிகமான போதைப் பொருள் உள்ளீர்த்ததால் உயிரிழந்ததாக கருதப்படும் இரு இளைஞர்களின் சடலம் நேற்றைய தினம் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

திடீர் சுகயீனமடைந்ததாக கூறி வித்திராஸ் – மௌசாட் (வயது 35), மகேந்திரன் பிரதீப் (வயது 26) என்ற இருவரே இவ்வாறு திடீர் சுகயீனமடைந்ததாக தெரிவித்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.

வாகனம் ஒன்றில் 4 பேர் கொழும்பு நோக்கிப் பயணித்த நிலையில் நோய்வாய்ப்பட்டதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிக போதைப் பொருள் பாவனையே மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக வாகனத்தில் இருந்த எஞ்சிய இருவரிடமும் தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்றன.

Related Posts