உக்ரைனில் ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக போரில் களமிறங்கியதற்காக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மந்திரி ஹெலன் கிராண்டின் மகனான பென் கிராண்ட் மீது குற்றவியல் வழக்கைத் தொடங்கியுள்ளதாக ரஷ்ய நீதித்துறை தெரிவித்துள்ளது.
கூலிப்படை மீதான குற்றவியல் வழக்கின் கட்டமைப்பிற்குள், பிரித்தானியாவை சேர்ந்த பென் கிராண்ட் உக்ரைனுக்காக ஆற்றிய பங்கை ரஷ்ய புலனாய்வாளர்கள் தீர்மானிக்கின்றனர் என்று ரஷ்ய விசாரணைக் குழு அறிவித்துள்ளது.
பல நாடுகளைப் போலவே ரஷ்யாவிலும் கூலிப்படையானது ஒரு குற்றவியல் குற்றமாகும். அதன் கீழ், கிராண்டிற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரித்தானிய கடற்படையான ராயல் மரைன்களில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர் பென் கிரான்ட். கடந்த மார்ச் முதல், அவர் உக்ரைனின் பக்கம் போரிட்டதற்காக பிரித்தானிய ஊடகங்களில் ஹீரோவாகப் போற்றப்படுகின்றார்.