உக்ரைன் – ரஷ்யாவிற்கு இடையிலான போர் நீடித்துள்ள நிலையில், உக்ரைன் நகரான கார்கிவில் இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஐந்து மாத குழந்தையும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் ஷெல் தாக்குதலில் ஐந்து மாத குழந்தை உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் மூவர் போரின் முக்கிய மையமான கிழக்கு நகரமான லிசிசான்ஸ்க் மற்றும் அதைச் சுற்றியுள்ள தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கார்கிவ் பிராந்தியத்தில், பலாக்லியா நகரின் ஷெல் தாக்குதலில் 64 மற்றும் 82 வயதுடைய இரண்டு ஆண்கள் கொல்லப்பட்டதாகவும், ஒன்பது வயது சிறுமி உட்பட 10 பேர் காயமடைந்ததாகவும் ஆளுநர் ஓலே சினேஹுபோவ் தெரிவித்தார்.
உக்ரேனிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியின் ஒரே பகுதியான சீவிரோடோனெட்ஸ்க் பகுதியில் ரஷ்யப் படைகள் தொடர்ந்து காலூன்ற முயற்சித்து வருவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.