அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 500 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளன

அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 500 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளன.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களை திறந்த கணக்கு முறையின் ஊடாக இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உணவுப் பாதுகாப்பு தொடர்பான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

திறந்த கணக்கு முறைக்கு உணவினை இறக்குமதி செய்வது கடந்த 6ஆம் திகதி முதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

Related Posts