உக்ரைனுக்கு எதிராக புடினின் போருக்கு எதிர்ப்பு வெளியிட்டு ரஷ்ய ராஜதந்திரி ஒருவர் பதவிவிலகியுள்ளார்.
“இரத்தம் தோய்ந்த, புத்திசாலித்தனமற்ற” போருக்கு எதிர்ப்பு தெரிவித்தே தாம் தமது பதவியை விட்டு விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான துாதகத்தில் பணிபுரியும் பொண்டரேவ் என்பவரே தமது பதவியை விட்டு விலகியுள்ளார்.
இந்தப் போரை, உக்ரைனிய மக்களுக்கு எதிரான குற்றம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ராஜதந்திரியின் பதவி விலகல் குறித்து மொஸ்கோ இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
உக்ரைன் மீதான தமது இராணுவத் தாக்குதல்களை, ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கை என்று மட்டுமே குறிப்பிடும் ரஷ்யா, அதனை விமர்சிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதேவேளை அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களே இந்த போரை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பதவி விலகிய ரஷ்ய ராஜதந்திரி, அதனை அடைவதற்காக அவர்கள் எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் பலிகொடுக்க தயாராகவே தயாராக உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் தற்போது தமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.