வடக்கிலும் 4ஆம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுப்பு!

வடக்கிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு 4ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வடக்கிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாம் தடுப்பூசியைப் பெற்றவர்கள், 3 மாதங்களுக்குப் பின்னர் நான்காம் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts