அரசியல் உறுதித்தன்மையை உடனடியாகக் கொண்டுவருமாறு அனைத்து அரசியல் தலைவர்களையும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கேட்டுக்கொள்கிறார்.
இப்போது அது நடக்கவில்லை என்றால், மக்கள் தினமும் 10-12 மணிநேர மின்தடை, அதிக எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய தட்டுப்பாட்டை அடுத்த வாரம் எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் எச்சரிக்கிறார்.
“இந்த நேரத்தில் எந்த இறக்குமதி பொருள்களிலும் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். உங்களுக்கு தொலைக்காட்சி பெட்டி மற்றும் குளிர்சாதனப் பெட்டி வேண்டுமானால் சிறிது காலம் தள்ளிப் போடுங்கள். எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மாத்திரம் பணத்தை பயன்படுத்துங்கள்” என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தினார்.
எதிர்வரும் வாரங்களில் அரசியல் உறுதித்தன்மை ஏற்படாவிடின், இனி ஆளுநர் பதவியை வகிக்க விரும்பவில்லை என ஜனாதிபதி உள்பட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.