காலிமுகத்திடல் பகுதியில் இராணுவம் குவிப்பு!! இராணுவத் தளபதி களத்தில்!!

காலிமுகத்திடலில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்து குறித்த பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை விலக்கிக்கொண்டு இராணுவத்தினர் குறித்த பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த பகுதிக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை கண்காணிப்பதுடன் நிமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் குவிந்துள்ள சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைச் சுற்றி கைகளைக் கோர்த்து அவர்களை பாதுகாத்து தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதோடு , ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

அத்தோடு காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் வைத்தியர்கள், தாதிகள் உள்ளிட்ட வைத்தியசாலை ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts