எரிவாயு சிலிண்டர்களை ஏப்ரல் 25ஆம் திகதி வரை சந்தைக்கு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எரிவாயு சரக்கு கப்பல்கள் இன்னும் கரைக்கு வந்தடையாததால், விநியோக வலையமைப்பை சீராக்க வேண்டிய நெருக்கடியான சூழ்நிலையில் நிறுவனம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தங்களுக்கு எரிவாயு விநியோகச் சங்கிலியில் சிக்கல் உள்ளதாகவும் இருப்பினும் நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு பற்றாக்குறை ஓரிரு மாதங்களுக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
முன்னதாக, ஏப்ரல் 12 முதல் வணிக நோக்கங்களுக்காக LITRO எரிவாயு விநியோகம் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.