எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிப்பு!!

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையினை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரித்துள்ளது.

அதன்படி, அனைத்து வகையான பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையை 35 ரூபாயினாலும் டீசல் லீட்டர் ஒன்றின் விலையினை 75 ரூபாயினாலும் அந்த நிறுவனம் அதிகரித்துள்ளது.

அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 338 ரூபாய்க்கும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 367 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேநேரம், ஒரு லீற்றர் ஒட்டோ டீசல் 289 ரூபாய்க்கும் ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 327 ரூபாய்க்கும் பிரிமியம் 295 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Posts