அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது 237 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அதன் செயலாளர் மருத்துவர் செனல் பெர்னாண்டோ இந்தக் கருத்தை வெளியிட்டார்.
மருந்துப் பற்றாக்குறையால் அரச மருத்துவமனைகளும் தனியார் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
இதய நோயாளிகள், இருமல், சளி, வெறிநாய்க்கடி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருந்துகள் தற்போது கிடைக்கவில்லை என்று மருத்துவர் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
சிறப்பு சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளையும் மருந்துப் பற்றாக்குறை தாக்கம் செலுத்தும் என அவர் கூறினார்.
டொலர் நெருக்கடியானது முழு நாட்டையும் தாக்கியுள்ளது. அதனால் அரச மருத்துவமனைகள் மட்டுமன்றி தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களிலும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் செனல் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.