யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக வைத்தியர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்பாக ஒன்றுகூடி வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்தியாவசிய மருந்துகள் இல்லை, சுகாதார கட்டமைப்பு சீர்குலைவு, இலவச மருத்துவம் ஆபத்தில் உள்ளது போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

அரசாங்கத்தின் மோசமான நிதி நிர்வாகம் காரணமாக அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் சுகாதார கட்டமைப்பு சீரழிந்து வருகின்றது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மக்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன என தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது.

Related Posts