திருட்டுச் சம்பவம் ஒன்றின் சந்தேக நபரிடம் 30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற இளவாலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை – பொன்னாலை வீதியில் வைத்து அவர் நேற்று (05) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
இளைவாலை பொலிஸ் பிரிவில் வீடுடைத்து திருட்டில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரிடமிருந்து இலஞ்சம் பெற முற்பட்ட போதே ஆனைக்கோட்டையைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.