தற்போதைய நிலையில் மின் கட்டணம், எரிவாயு மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதனை அறிவித்துள்ளார்.
மின் கட்டணம், எரிவாயு மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது.