இலங்கை மின்சார சபையின் மின் உற்பத்தி அலகு மூடப்பட்டது!

களனிதிஸ்ஸ அனல்மின் நிலைய வளாகத்திலுள்ள இலங்கை மின்சார சபையின் GT-7 இன் ஒற்றை மின் உற்பத்தி அலகு மூடப்பட்டுள்ளது.

டீசல் இல்லாத காரணத்தினால் இன்று(வியாழக்கிழமை) காலை திடீரென மூடப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.

GT-7 ஆலையின் செயல்பாடுகள் காலை 7:21 மணிக்கு திடீரென நிறுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

அனல்மின் நிலையம் நிறுத்தப்பட்டதால், தேசிய மின்வாரியத்திற்கு 115 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts