நாட்டை வளப்படுத்துவோம், பாதுகாப்போம் எனது தெரிவித்து ஆட்சிக்கு வந்தவர்கள், குறுகிய காலத்திற்குள் நாட்டை ஆதளபாதாளத்துக்குள் தள்ளியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
எனவே, இந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஹட்டனில் நேற்று நடைபெற்ற பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக, கையெழுத்து சேகரிக்கும் போராட்டத்திலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
எரிபொருள் தட்டுப்பாடு, நீண்டநேர மின்வெட்டு, பொருட்களின் விலையேற்றத்திற்கு மத்தியில் நாட்டு மக்களுக்கு எவ்வித நிவாரணம் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.
இவ்வாறான நிலையில் போராட்டம் செய்யும் மக்களை ஒடுக்குவதற்கு அவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதாகவும் இப்படியான ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் இருக்கக்கூடாது என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.