இரு கடைகளில் கொள்ளை

robberyயாழ். ஆஸ்பத்திரி வீதி புகையிரத நிலையச் சந்தியிலுள்ள இரு கடைகள் உடைக்கப்பட்டு அக்கடைகளிலிருந்து பணமும் பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் இக்கடைகளை மூடிவிட்டுச் சென்ற கடை உரிமையாளர்கள், இன்று புதன்கிழமை அதிகாலை கடைகளை திறப்பதற்கு வந்தபோது கடைகளின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருப்பதையும் கடைகளிலிருந்த பணமும் பெறுமதியான உபகரணங்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதையும் கண்டு யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இக்கடைகளிலிருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன. கடைகளிலிருந்து பணம், மீள்நிரப்பு அட்டைகள், குளிர்பானங்கள் சிகரெட்டுக்கள் உள்ளிட்டவை கொள்ளையிடப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts