வடமராட்சியில் மீன் பிடிக்கச் சென்ற இருவரை காணவில்லை

MP_LOGO_Kவல்வெட்டித்துறை கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை காணமல்போயுள்ளதாக யாழ். மாவட்ட கூட்டுறவு சங்க சமாசனங்களின் தலைவர் அ.எமிலியாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

குறித்த கடலில் மீன் பிடிக்கச்; சென்ற நான்கு மீனவர்களில் இருவர் இதுவரையில்; வீடு திரும்பவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் வடமராட்சி பொலிகண்டி பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இக்கடற்பரப்பில் காற்று, இடியுடன் கூடிய மழை காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts