மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் மோதியதில் ஒருவர் பலி!!

சுன்னாகம் சந்தியில் வீதி சமிஞ்சை விளக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் மதுபான சாலையிலிருந்து மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்டுத் தப்பி ஓடியவர்கள் மோதியே இந்த விபத்து இடம்பெற்றது.

ராசா ரவிச்சந்திரன் என்ற 50 வயது மதிக்கத்தக்கவரே உயிரிழந்தார்.

சுன்னாகம் மதுபான சாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தென்மராட்சியைச் சேர்ந்த இருவர் கொள்ளையிட்டு தப்பித்ததை மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் கண்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் உரிமையாளர் உளிட்டோர் துரத்திச் சென்ற நிலையில் கொள்ளையர் பயணித்த மோட்டார் சைக்கிள் சுன்னாகம் சந்தி வீதி சமிஞ்சை விளக்கு பகுதியில் எதிரே வந்தவரை மோதித்தள்ளியது.

சம்பவ இடத்திலேயே அதிக குருதிப் போக்கு போன நிலையில் அவர் உயிரிழந்தார்.

கொள்ளையர்கள் இருவரும் பிடிக்கப்பட்டு சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts