பஸ்களில் நின்று பயணிப்போருக்கு புதிய கட்டணம்!!

பேருந்துகளில் ஆசனங்களில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் நின்று பயணிக்கும் பயணிகளுக்கு வேறொரு கட்டணமும் அறவிடும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஆசன எண்ணிக்கையை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றால் இரண்டு வகையான கட்டணங்கள் அறிவிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும், நிற்கும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts