எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கு இலங்கை தவறும் பட்சத்தில் சுமார் 4 மணித்தியாலங்கள் நாளாந்தம் மின்தடையினை அமுல்படுத்த நேரிடும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நாடு தயாராக இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான முயற்சியின் அடிப்படையில், கடன்தொககையினை பெறாவிட்டால் மார்ச் மாதத்திற்குள் சுமார் 4 மணி நேர நாளாந்த மின்தடையினை அமுல்படுத்த நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.