இறுதி கட்டத்தை எட்டியுள்ளது கொரோனா தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் சட்ட தயாரிப்பு பணிகள்

பொது இடங்களில் நடமாடுபவர்கள் கொரோனா தடுப்பூசி அட்டைகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்த சட்ட தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பூஸ்டர் எனப்படும் செயலூக்கி தடுப்பூசியை அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என அசேல குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.

குறித்த தடுப்பூசியை செலுத்துவதன் ஊடாக பல்வேறுப்பட்ட நோய் அறிகுறிகள் ஏற்படுவதாக வெளியான தகவல் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts