மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
வலி.வடக்கு மீனவர் சமாசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் மயிலிட்டி துறைமுகத்தில் ஒன்றுகூடிய மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துமீறுகின்ற இந்திய மீனவர்களை கைது செய், கைது செய்கின்ற படகுகளை அரசுடைமையாக்கு போன்ற கோஷங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பினர் கொட்டும் மழையிலும் கடற் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.