மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மாங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.
சந்தேக நபர் இன்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மாங்குளம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.