யாழில் விரிவுரையாளர் வீட்டில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது- மனைவி காயம்

துன்னாலை பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதினால், விரிவுரையாளரின் மனைவி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் அ.பௌநந்தி வீட்டிலையே இந்தச் சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வழமை போன்று நேற்று காலை, விரிவுரையாளரின் மனைவி உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது,எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதுள்ளது.

இதன்போது வெடித்து சிதறிய அடுப்பின் பாகம் ஒன்று விரிவுரையாளரின் மனைவியின் தலையில் பட்டதில் அவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

அதேவேளை அடுப்பு வெடித்து சிதறிய அதிர்வில், சமயலறையின் சீலிங் சீட்டும் வெடித்துள்ளது.

எரிவாயு சிலிண்டரை நேற்றுமுன்தினமே மாற்றி இருந்ததாக விரிவுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts