இலங்கையில் சுமார் 60 கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 89 சிறுவர்கள் கொரோனாவால் உயிரிழப்பு!

இலங்கையில் இதுவரை சுமார் 60 கர்ப்பிணித் தாய்மார்களும் 18 வயதுக்கு உட்பட்ட 89 குழந்தைகளும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக குடும்ப நலப் பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்தராமலி டி சில்வா தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கர்ப்பிணித் தாய்மார்களின் மரணங்கள் அனைத்தும் மூன்றாவது அலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

95% கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுள்ளதால், இறப்புகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதோடு, நோய்த்தொற்றுகளும் குறைந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Posts