பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு கோரிக்கை!!

பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு பொது சுகாதார ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, கடந்த சில வாரங்களாக பொதுமக்களின் நடத்தை காரணமாக பயணக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தவிர்க்க முடியாததாக உள்ளதாக தெரிவித்தார்.

பண்டிகைக் காலங்களில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தத் தவறினால், ஜனவரியில் கடுமையான நிலைமை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

நாட்டில் மீண்டும் முடக்கம் அமுல்படுத்தப்படுவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சகம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts