கிளிநொச்சியில் ஏ-9 வீதியில் இன்று (15) காலை நடந்த விபத்தில் உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாணவி மஞ்சள் கோடு ஊடாக வீதியைக் கடக்க முயன்றபோது வாகனம் மோதி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு உயர்தர வகுப்புக்கு அனுமதி பெற வந்தபோதே இந்த விபத்து நடந்துள்ளது. மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மாணவி மஞ்சள் கோடு ஊடாக வீதியைக் கடக்க முயன்றபோது, பட்டா ரக வாகன சாரதி வாகனத்தை நிறுத்தி வழிவிட்டார். பட்டா ரக வாகனத்தின் பின்புறம் டிப்பர் வாகனம் ஒன்றும் வந்து நின்றது. ஆயினும் இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்து டிப்பர் வாகனத்தை மோதியதில், முன்னிருந்த இரு வாகனங்களும் மாணவியின் மீது மோதி விபத்து நடத்துள்ளது.
உயிரிழந்த மாணவி கிளிநொச்சி, ஊற்றுப்புலத்தைச் சேர்ந்தவர் என்றும், பொருளாதாரம் நலிந்த குடும்பத்தில் இருந்து திறமையாகக் கற்பர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி மகா வித்தியாலத்தில் உயர்தர வகுப்புக்கு அனுமதி பெற வந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்துத் தொடர்பாகக் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.