இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 715 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 48 ஆயிரத்து 61 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 5 இலட்சத்து 22 ஆயிரத்து 789 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 11 ஆயிரத்து 345 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் 03 ஆணும் 01 பெண்ணும் 60 வயதுக்கு மேற்பட்மோரில் 08 ஆண்களும் 07 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 927ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts