பலாலி விமான நிலைய மீள்நிர்மான பணிகளின் ஆரம்ப நிகழ்வு இம் மாதம் 2ம் திகதி ஆரம்பமாகியது.பலாலி விமான நிலையத்தினை பயன்படுத்தும் பயணிகளின் நன்மை கருதி விமான நிலைய போக்குவரத்து பாதையை சீரமைக்க வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி ரூபா 6 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளார். இதனடிப்படையில் மீள்நிர்மான வேலைகள் உட்கட்டுமான அபிவிருத்தி மற்றும் மீள்நிர்மான அமைச்சின் செயலாளர் எந்திரி.ஏ.ஈ.எஸ்.ராஜேந்திராவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. உட்கட்டுமான அபிவிருத்தி மற்றும் மீள்நிர்மான அமைச்சின் செயலாளர் ஆளுநர் சார்பாக இந்நிகழ்வில் கலந்து கொண்டார். இப்புனர்நிர்மானம் மூலம் பயணிகள் இலகுவாகவும் சௌகரியமாகவும் பயணிக்க முடியும்.
விமானப்படை உயர் அதிகாரிகள், வீதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் எந்திரி.ரி.சிவராஜலிங்கம் மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.