வடமாகாண பிரதித் தேர்தல் ஆணையாளராக புதியவர் நியமனம்

appointment-headerவடமாகாண பிரதித் தேர்தல் ஆணையாளராக அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ். அச்சுதன் நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் இன்று தெரிவித்தார்.

எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் யாழ். மற்றும் வடமாகாணத்திற்கான தேர்தல் ஆணையாளராக எஸ். அச்சுதன் தேர்தல் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், யாழ். மாவட்டத்திற்கு நிரந்தர உதவித் தேர்தல் ஆணையாளர் நியமிக்கப்படும் வரை இவர் இரு பொறுப்புக்களிலும் கடமையாற்றவுள்ளதாகவும், 15ஆம் திகதிக்கு பின்னர் தான் வன்னி மாவட்டத்திற்கு செல்லவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related Posts