யாழ். வாக்காளர் இடாப்பு பொதுமக்கள் பார்வைக்கு

voters-list2012ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு பிரதிகள் ஒவ்வொரு பிரதேச கிராம அலுவலர் பிரிவுளிலும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் இன்று தெரிவித்தார்.

காட்சிப்படுத்தப்பட்டுள்ள வாக்காளர் இடாப்பு பிரதியில் பெயர்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளில் தவறுகள் காணப்பட்டால், வாக்காளர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதிக்கு முன்னர் உரிய கிராம சேவையாளர் அலுவலகத்தின் ஊடாக விண்ணப்ப படிவங்களை யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

விண்ணப்பங்களை உரிய காலத்திற்குள் அனுப்பி வைக்க தவறும் வாக்காளர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய கால தாமதம் ஏற்படுமென்றும் இதனை தவிர்க்கும் முகமாகவும், அந்தந்த வாக்காளர் பெயர்ப்பட்டியல் அடுத்த வருடம் மே மாதத்தில் அத்தாட்சிப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் தற்போது அந்த வருட டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related Posts