நாடு, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் திறக்கப்பட்டாலும் இரவு நேர ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி அத்தியாவசியமற்ற எந்தவொரு செயற்பாடுகளும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று முதல் 15ஆம் திகதி வரை பதிவுத் திருமணங்களில் 10 பேர் மாத்திரம் கலந்துகொள்ள முடியுமெனவும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உற்சவங்கள், கேளிக்கை நிகழ்வுகள் மற்றும் விருந்துபசார நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது போக்குவரத்து சேவைகளின்போது ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டுமென்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.