இறக்குமதி பால் மாவின் விலையை ஒரு கிலோகிராமுக்கு 200 ரூபாவால் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதி தீர்மானம் அடுத்த வாரம் வாழ்க்கைச் செலவுக் குழுவால் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன நேற்று (18) பால் மா இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போது, ஒரு கிலோ பால் மாவின் விலையை 350 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று இறக்குமதியாளர்கள் கோரியிருந்தனர்.
கலந்துரையாடலின் போது, ஒரு கிலோகிராம் பால் மாவின் விலையை 200 ரூபாவால் அதிகரிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.