யாழில் கொரோனா வைரஸ் தொற்றினால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம்- நாவாந்துறையைச் சேர்ந்த இமானுவேல் ராஜன் மரியதெஸ்ரா (வயது-36) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 1ஆம் திகதி காய்ச்சல் காரணமாக யாழ்.வைத்தியாலையில் அவர் அனுமதிக்கப்ப்டார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கொரோனா சிகிச்சை விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

எனினும் அவர் சிகிச்சை பயனின்றி நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

மேலும், சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சுகாதார முறைப்படி தகனம் செய்ய அனுமதி் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts